பெற்ற மகளை கொலை செய்துவிட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அமெரிக்காவின் தெற்கு புளோரிடா மாகாணத்தை சேர்ந்த தந்தை ஒருவர் தனது 14 வயது மகளை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இத்தகைய கொடும் சம்பவம் நடக்கும் வேளையில் சிறுமியின் தாய் சமையலறையில் சமைத்துக் கொண்டு இருந்துள்ளார். கொல்லப்பட்ட சிறுமி சில நாட்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். சிறுமியின் தொடை பகுதியில் புற்றுநோய் ஏற்பட்டிருந்தால் வரும் 28ஆம் தேதி சிறுமியின் ஒரு காலை அறுவை சிகிச்சையில் அகற்றுவதற்கு மருத்துவர்கள் முடிவு செய்திருந்தனர்.
அதோடு அதே நாளில் தான் சிறுமியின் பெற்றோருக்கு திருமண நாள் ஆகும். புற்றுநோயால் சிறுமி பாதிக்கப்பட்டதிலிருந்து மிகுந்த வேதனையில் பெற்றோர் இருந்து வந்தனர். இந்த நிலையில் தான் சிறுமியின் தந்தை இத்தகைய விபரீத செயலை மேற்கொண்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரி மார் லியோன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.