Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் மக்களுக்காக – மகிழ்ச்சி செய்தி …!!

கொரோனா கால ஊரடங்கு, தடுப்பு பணிகள்,  நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருந்தாலும், எட்டு மாதங்கள் கழித்து வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு ஆளும் அதிமுக அரசாங்கம் பல்வேறு நலத் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வீடுகளில் முடங்கி இருக்கும் மக்களுக்கு ஏதுவாக ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கும் நடமாடும் திட்டம் அறிமுகம் செய்துள்ளது.

தமிழகத்தில் ரூபாய் 9.66கோடியில் 3501 நடமாடும் அம்மா ரேஷன் கடைகளை திறக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 5.36 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவர், கடைகள் செயல்படும் இடம், நேரம், நாட்களுக்கு ஆட்சியர் அனுமதி பெற வேண்டும். நடமாடும் ரேஷன் கடை திறக்க நடவடிக்கை பற்றி ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்குள் அறிக்கை தரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |