Categories
தேசிய செய்திகள்

இந்தியா முழுவதும் மறு உத்தரவு வரும் வரை – அறிவிப்பு

நாடு முழுவதும் கொரோனா பரவல் திணறடித்துக்கொண்டு இருக்கின்றது.  குறிப்பாக இந்தியாவிலும் இதன் தாக்கம் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு சென்று கொண்டிருக்கிறது. இதனால் அட்டவணைப்படுத்தப்பட்ட பல தேர்வுகள் மாணவர்கள் நலன் கருதி ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது மருத்துவ நுழைவுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி நடைபெறவிருந்த பி.டி.எஸ், எம்.டி.எஸ் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாணவர்களின் கோரிக்கை ஏற்று தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்வு  தேதி கொரோனா பரவல் குறைந்த பிறகு அறிவிக்கப்படும் எனவும் சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது.

Categories

Tech |