Categories
உலக செய்திகள்

102 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் கொரோனா… நியூசிலாந்து அரசு ஆய்வு…!!!

நியூசிலாந்தில் 102 நாட்களுக்கு பின்னர் 4 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் நாட்டில் மீண்டும் வைரஸ் எப்படி பரவுகிறது என்று அந்நாட்டு அரசு தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருக்கிறது.

சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதும் பரவிக் கொண்டிருக்கிறது. வலுவான சுகாதார கட்டமைப்புகளை கொண்டுள்ள நாடுகள் கூட கொரோனாவை கட்டுப்படுத்த இயலாமல் திணறி வருகின்றன. நியூசிலாந்தில் கொரோனா பரவத் தொடங்கிய மார்ச் மாதத்திலிருந்து நாடு முழுவதும் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளுடன் அமல்படுத்தியது. அதன் மூலமாக பிரதமர் ஜெசிந்தா தலைமையிலான அரசு கொரோனாக்கு எதிரான போரில் வெற்றி கண்டுள்ளது. அதனால் நியூசிலாந்து மக்கள் 100 நாட்களை கடந்து கொரோனா இல்லாமல் வாழ்ந்து வந்தார்கள். அதற்கு உலக சுகாதார அமைப்பு நியூசிலாந்து மக்களுக்கும் மற்றும் பிரதமர் ஜெசிந்தா உருகும் வாழ்த்து தெரிவித்து இருந்தது.

அதன் பின்னர் 100 நாட்களாக நாட்டில் கொரோனா பரவல் இல்லாத காரணத்தால் மக்கள் பயத்தில் இருந்து விடுபட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் நியூசிலாந்து மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடிய வகையில் 102 நாட்களுக்குப் பிறகு ஆங்லாந்தில்  ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. நூறு நாட்களுக்கு மேல் கொரோனா முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், திடீரென ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் இருக்கு கொரோனா உறுதியாகியது எப்படி என்ற கேள்வி எழுந்திருக்கிறது.நாட்டில் மீண்டும் கொரோனா பரவியது எப்படி என்று பிரதமர் ஜெசிந்தா தலைமையிலான அரசு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

இது பற்றி பிரதமர் ஜெசிந்தா கூறுகையில், “102 நாட்களுக்கு பிறகு நியூசிலாந்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியாகிய குடும்பத்துடன் தொடர்பில் இருந்த 200க்கும் மேற்பட்டவர்களை நாங்கள் தொடர்பு கொண்டு பரிசோதனை மேற்கொண்டுள்ளோம். ஆங்கிலாந்தில் இன்று பரிமாற்ற சங்கிலியை நிறுத்துவதற்கான எங்களின் கட்டுப்பாடுகள் முழுவீச்சில் இருக்கின்றன. கொரோனா பரவலுக்கான அனைத்து சாத்தியக் கூறுகள் குறித்து தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். விரைவில் அதனை கண்டறிந்து கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்படும்.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் உணவகங்கள், மதுபான கடைகள் மற்றும் பெரிய வணிக வளாகங்கள் ஆகியவற்றை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட 4 பேரையும் தனிமைப்படுத்தி அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் கண்டறிந்து அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கை நடந்து கொண்டிருக்கிறது. ஆங்கிலாந்து மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் முகக் கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்படவில்லை. மக்கள் தாங்கள் எதிர்கொள்கின்ற சூழ்நிலையை பொருத்து முக கவசம் அணிவது பற்றி தாங்களே முடிவு செய்து கொள்ளலாம். மத்திய அரசின் சார்பில் மக்களுக்காக 50 லட்சம் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |