வெளிநாடுகள் கூறியுள்ள தடுப்பூசிக்கு எதிரான கருத்துகளுக்கு, ரஷியா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்திருக்கிறது.
ரஷியா உருவாக்கி இருக்கின்ற ஸ்புட்னிக்-5 என்னும் கொரோனா தடுப்பூசி மிக விரைவாக உருவாக்கப்பட்டிருக்கிறது, நம்பகத்தன்மையற்றது, பாதுகாப்பற்றது என்ற பல்வேறு குற்றசாட்டுகளை வெளிநாடுகள் முன்வைத்து வருகின்றன. இதனை ரஷிய சுகாதார மந்திரி மிக்கேல் முராஷ்கோ திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது குறித்து அவர் மாஸ்கோவில் நேற்று கூறுகையில், “ரஷிய தடுப்பூசிக்கு எதிரான வெளிநாடுகளின் விமர்சனங்கள் அனைத்தும் அடிப்படையற்றவை.
வெளிநாட்டவர்கள் இதனை பெரும் போட்டியாக பார்க்கிறார்கள் என்றே நம்புகிறேன். அதனால் தான் அவர்கள்,எங்களுக்கு எதிரான கருத்துகளை கூறுவதற்கு முயற்சி செய்கிறார்கள். இதற்கெல்லாம் அடிப்படை ஆதாரம் எதுவும் இல்லை என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். ரஷிய தடுப்பூசியின் பின்னால் நிச்சயமாக சில மருத்துவ அறிவு மற்றும் தரவுகள் இருக்கின்றன” என்று அவர் கூறியுள்ளார்.