Categories
உலக செய்திகள்

சீனாவில் பரவிய அடுத்த தொற்று… ஒருவர் உயிரிழப்பு…. அச்சத்தில் மக்கள்….!!

மங்கோலியாவில் புபோனிக் பிளேக் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்துக் கொண்டு வருகிறது. இதில் இருந்து மீண்டு வர உலக நாடுகள் அனைத்தும் போராடி வருகின்றன. இந்நிலையில் சீனா மற்றும் அதன் அண்மை நாடான மங்கோலியாவில் தற்போது பரவி வரும் புபோனிக் என்ற பிளக் நோய் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இது ஒரு பாக்டீரிய நோய். இது மர்மோட் போன்ற காட்டில் உள்ள கொறித்து தின்னும் உயிரினங்களால் பரவுகிறது. இந்த நோய்க்கு உரிய சிகிச்சை கொடுக்கப்படாவிட்டால், பாதிக்கப்பட்ட நபர் 24 மணி நேரத்தில் உயிரிழக்கும் அபாயம் உள்ளது என உலக சுகாதார அமைப்பின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்த கொடிய நோய் மற்றவர்களுக்கும் பரவ வாய்ப்பு இருப்பதால் சீனா மற்றும் மங்கோலியாவின் சில பகுதிகளில் 3-ம் கட்ட எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. சென்ற மாதம் 1ஆம் தேதி மேற்கு மங்கோலியாவின் கோவ்ட் மாகாணத்தில் உள்ள இருவருக்கு புபோனிக் பிளேக் நோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. மேலும் அவர்கள் இருவரும் மர்மோட் இறைச்சியை சாப்பிட்டதாக தெரிவித்தனர். எனவே மர்மோட் இறைச்சியை மக்கள் சாப்பிட வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும் சென்ற மாதம் 15ஆம் தேதி அந்த நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள கோவி அல்டாய் மாகாணத்தில் 15 வயதான சிறுவன் ஒருவன் புபோனிக் பிளேக் நோயால் உயிரிழந்துள்ளான். இந்நிலையில் மங்கோலியாவில் இந்தக் கொடிய புபோனிக் பிளேக் நோய்க்கு 42 வயதான ஒருவர் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சை பலனில்லாமல் நேற்று பரிதாபமாக பலியானார். அவருடன் தொடர்பில் இருந்த அனைவரும் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருப்பதாக மங்கோலிய அரசு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |