எச்1பி விசா இருந்தால் அமெரிக்காவில் மீண்டும் தொடர்ந்து பணியாற்றலாம் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
எச்1பி விசா குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ” சென்ற ஜூன் 22ல் எச்1பி விசாவுக்கு இந்த வருட இறுதிவரை தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அமெரிக்கா தளர்வு அறிவித்துள்ளது. ஏற்கனவே இங்கு வேலை பார்த்தவர்கள் எச்1பி விசா மூலம் மீண்டும் திரும்பி வந்து பணிபுரியலாம்.
ஏற்கனவே தாங்கள் பார்த்து வந்த வேலையில் சேர்ந்து மீண்டும் பணிபுரிவதாக இருந்தால் மட்டுமே அமெரிக்காவிற்கு திரும்பலாம். மேலும் எச்1பி விசா ஊழியர்கள் தங்களது மனைவி, குழந்தைகளையும் அழைத்து வரலாம்” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.