கீழ்க்கண்ட இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது .
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி வளாகங்கள் திறப்பதற்கு மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பதற்கான நடவடிக்கைகள் ஒருபுறம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாணவர் சேர்க்கை குறித்த கேள்வி பெற்றோர் மனதில் தொடர்ந்து எழ, அதற்கான பதிலை பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும், பள்ளிக் கல்வித்துறையும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது மாணவர் சேர்க்கை குறித்து முக்கிய தகவல் ஒன்றை பள்ளி கல்வித்துறை அதில், அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது இட ஒதுக்கீடு விதிகளை பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்க்கு 20 சதவிகிதமும், பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர் 3.5%, பிற்படுத்தப்பட்டோர் 26.5%, எஸ் எஸ் சி 18% ,ST 1% என்ற அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.