பஞ்சாப்பில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன்களை அம்மாநில அரசு வழங்கியது.
பஞ்சாப்பில் 2017 சட்டமன்றத் தேர்தலில் இளைஞர்களுக்கு ஸ்மார்ட்போன் வழங்குவதாக ஆளும் காங்கிரஸ் கட்சியினரால் வாக்குறுதி வழங்கப்பட்டது. ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்களுக்கு பிறகு தற்போது வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளனர். 6 கோடி ரூபாய் மதிப்புள்ள பஞ்சாப் ஸ்மார்ட் இணைப்புத் திட்டத்தை முதல்வர் அம்பரீதிங்க் சிங் காணொளி மூலம் தொடங்கி வைத்தரர்.
ஒரே நேரத்தில் 26 இடங்களில் பல்வேறு அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மாநில முழுவதும் ஸ்மார்ட் போன்களை விநியோகித்தனர். இத்திட்டத்தின் கீழ் வினியோகிக்கப்படும் ஸ்மார்ட்போன்கள் மாணவர்களின் கல்விக்கு ஒரு முக்கிய கருவியாக மாறும் என்று முதல்வர் கூறினார்.