Categories
இந்திய சினிமா சினிமா

“சுஷாந்த் மரணம்” ஆலியாபட் படத்திற்கு குவியும் வெறுப்பு…. பாலிவுட்டில் அதிர்ச்சி…!!

ஆலியா பட் நடிப்பில் வெளியாக இருக்கும் சதக் 2 படத்திற்கு 22 மணிநேரத்தில் 4.5 மில்லியன் கிடைத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பாலிவுட்டில் ஆலியா பட் நடிப்பில் வெளியாகியிருக்கும் சதக்2 படத்தின் ட்ரெய்லர் வெளியான 22 மணி நேரத்தில் 4.5 மில்லியன் பேர் லைக் செய்துள்ளனர். மேலும் இந்த ட்ரெய்லர்க்கான டிஸ்லைக் இன்னும் அதிகரித்து கொண்டேதான் இருக்கிறது. இது ஆலியா பட் மற்றும் படக்குழுவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இப்படி மக்களிடையே இந்த ட்ரெய்லர் வெறுப்பை சம்பாதித்ததற்கான காரணம் என்ன என்று ஆராய்ந்து பார்த்ததில்,

இதற்கு முக்கிய காரணமாக சுஷாந்த் சிங்கின் மரணத்திற்கு காரணமாக இருந்த நெபோட்டிசம் தான். இதனை மையமாக வைத்தே மக்கள் இவ்வாறு செய்வதாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலர், இனி பாலிவுட்டை பொறுத்தவரை பிரபலங்கள் என்ற பேச்சுக்கு இடமில்லை. சுஷாந்த் சிங் போல் திறமையான நடிகர்களை மட்டுமே ஆதரிப்போம். அவர்களுக்காக தொடர்ந்து ஆதரவாகவும் குரல் கொடுப்போம் என்று தெரிவித்து வருகின்றனர். இது பாலிவுட் உலகில் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Categories

Tech |