புதுச்சேரியில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஒவ்வொரு செவ்வாய்க் கிழமைகளிலும் எவ்வித தளர்வுகளின்றி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் திரு நாராயணசாமி தெரிவித்துள்ளர்.
புதுச்சேரி முதலமைச்சர் திரு. நாராயணசாமி தலைமையில் பேரிடர் மேலாண்மை குழு கூட்டம் தலைமைச் செயலக கருத்தரங்க அறையில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் பெருகி வரும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து திரு. நாராயணசாமி வெளியிட்டுள்ள காணொளி செய்தியில், இன்னும் 6 வார காலத்திற்கு கொரோனா வேகமாக பரவும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து உள்ளதாக குறிப்பிட்டார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆகஸ்ட் 31-ஆம் தேதி முதல் அனைத்து செவ்வாய்க் கிழமைகளிலும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தர்.