Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமாக நடைபெறும் மது விற்பனை – கண்டுகொள்ளாத ஊராட்சி மன்ற தலைவர்

அரியலூரில் சட்டவிரோதமாக நடைபெறும் மது விற்பனையை கண்டுகொள்ளாத ஊராட்சி மன்ற தலைவரை அலுவலகத்தில் வைத்து பூட்டி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் அருகே உள்ள சாத்தாம்பாடி கிராமத்தில் சிலர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்துள்ளனர். இது தொடர்பாக பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் பலமுறை கூறியும் அவர் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரனை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்துப் பூட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த விக்கிரமங்கலம் காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து மறியலை கைவிட்ட பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை திறந்து விட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

Categories

Tech |