லடாக் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் HAL நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இரண்டு இலகு ரக போர் ஹெலிகாப்டர்கள் லே பகுதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.
லடாக் எல்லைப் பகுதியில் கடந்த ஜூன் மாதம் சீன ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதனையடுத்து எல்லையில் இந்திய சீன வீரர்கள் குவிக்கப்பட்டதால் லடாக் எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ராணுவ வீரர்களை எல்லையில் இருந்து திரும்பப் பெறுவது குறித்து இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் தயாரித்த இலகு ரக போர் ஹெலிகாப்டர்கள் லடாக் எல்லையில் நேற்று நிலை நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த இரண்டு இலகு ரக போர் ஹெலிகாப்டர்கள் எல்லையோரம் உள்ள ராணுவ நிலைகளுக்கு அருகே சென்று கண்காணித்து வரும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன. நவீன தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஹெலிகாப்டர்கள் இரவு நேரத்தில் இலங்கை சரியாக குறிவைத்து தகர்ப்பது. மோசமான வானிலையிலும் அதிக ஆயுதங்களுடன் உயரத்தில் பறப்பது உள்ளிட்ட திறன்களை கொண்டது.