வெள்ளையனுக்கு எதிராகவும் , காங்கிரசின் தலைவராகவும் இருந்தவர் அப்துல் கலாம் ஆசாத்.
நேதாஜியின் ராணுவ படைக்கு அன்றே ஒரு கோடி ரூபாய் வழங்கிய விடுதலைப் போராளி வள்ளல் ஹபீப் முஹம்மத்.
இன்று நாங்கள் அனுபவிக்கும் சுதந்திரம் உன் தியாகத்தால் உதித்தது பகதூர்ஷாவின் கல்லறையில் ராஜீவ் காந்தி எழுதிய வாசகம்.
கொடிகாத்த குமரன் உன்னோடு சேர்ந்து கொடியை பிடித்து சிறை சென்ற முஸ்லிம்கள் அப்துல் லத்தீப், அக்பர் அலி , மைதீன்கான் . அப்துல் லத்தீப் , அப்துல் ரஹீம், வாவு சாகிப் , ஷேக் பாபா சாகிப்
நேதாஜி ராணுவ படை தளபதி ஷாநவாஸ் கான்.
ஆங்கிலேயருக்கு எதிராக காந்தியின் கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் 19 பேரில் 10 பேர் முஸ்லிம்கள்.
நேதாஜி அமைத்த மந்திரிசபையில் 19 பேரில் 5 பேர் முஸ்லிம்கள் .
ஆங்கிலேயருக்கு எதிராக போராடி தன்னுடைய இருபத்தி ஏழாம் வயதில் தூக்கு மேடைக்கு சென்றவர் அஸ்பகுல்லாஸ்கான்
சுதந்திர போராட்டத்தில் பீரங்கிகளை பயன்படுத்தி ஆங்கிலேயரை மிரள வைத்த மாவீரன் திப்பு சுல்தான்.
1847 ஆம் ஆண்டு நடந்த முதல் சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர் மெளலவி அப்துல்லாஹ் ஷாஷ்
மாவீரன் திப்பு சுல்தான் தலைமையில் இந்திய சுதந்திர போர் நடந்திருந்தால் இந்தியா அன்றே விடுதலை அடைந்து இருக்கும் என்று மகாத்மா காந்தி கூறினார்.
பிரிட்டிஷ் தலைவன் சர் ஹெண்ட்ரி லாரன்சை தன் கையால் சுட்டுக்கொன்று அதற்காக சிறை சென்றவர் பேகம் ஹஜ்ரத் மகால்
சுதந்திரப் போராட்டத்திற்காக 30 லட்சம் ரூபாய் கொடுத்து நாடு விடுதலை பெற போராடிய பெண்மணி அன்னை பீவிமா
வ உ சி கைது செய்த வெள்ளையனிடம் வ உ சி யை விடுதலை செய் என்று போராடி வெள்ளையன் துப்பாக்கி சூட்டால் உயிர் நீத்தவர் முகமது யாசின்
இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் சுரையா தியாப்ஜி (முஸ்லிம் பெண்)
வெள்ளையனுக்கு எதிராக பள்ளிவாசலில் பிரச்சாரம் செய்ததால் பள்ளிவாசலில் புகுந்து பல முஸ்லிம்களை சுட்டு தள்ளினான் வெள்ளையன் இன்று சுவற்றில் காய்ந்த ரத்தக்கரை உள்ளது ஹனி பள்ளிவாசல் (உத்திரப்பிரதேசம்)
இந்திய முதல் விடுதலைப்போர் சிப்பாய் கலகத்தின் போரை தலைமையேற்று நடத்தியவர் மெளலவி அகமதுல்லா ஷா. இதில் இறந்தவர்களில் 90 சதவீதம் பேர் முஸ்லிம்கள்
வெள்ளையனை விரட்டி அடிக்க அவன் கொடுத்த கான் சாகிப் , ஷம்சுல் உலமா என்ற பட்டங்களை தூக்கி வீசினார்கள் முஸ்லிம் தலைவர்கள்.
வெள்ளையனுக்கு எதிராக 7 வருடம் தொடர் போர் செய்து வெள்ளையர்களின் சாம்ராஜ்ஜியத்தின் மிரள வைத்தவன் மாவீரன் மருதநாயகம்
வெள்ளையன் சுதந்திரம் கொடுக்கும் போது அதை எப்படி கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்தவர்கள் அபுல் கலாம் ஆசாத் ,ஜனாப் ஜின்னா , நவாப் ஆப் பிகார்
முஸ்லிம்கள் வெள்ளையனை விரட்டுவதற்காக ஆங்கிலம் படிப்பது ஹராம் என்று பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தினார்கள். இதன் விளைவால் 50 வருடம் பின்னோக்கி சென்றது இஸ்லாமிய சமுதாயம்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு அவர்களது விகிதாச்சாரத்தை விட அதிகம் என்று குஷ்வந்த் சிங் வரலாற்று ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் கூறினார்.