Categories
அரசியல்

இன்றைய கொரோனா பாதிப்பு – எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?

தமிழகத்தில் இன்று 37 மாவட்டங்களில் மொத்தம் 5,835 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 5,835 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,14,520 ல் இருந்து 3,20,355 ஆக அதிகரித்தது. 5,146 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 2,61,459 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு, 53,499 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்ச பாதிப்பாக சென்னையில் இன்று மட்டும் 989 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை 1,13,058 பேர் பாதிக்கப்பட்டு, தற்போது 10,868 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்று அடைந்தவர்களில் இதுவரை 81.62% குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 119 பேர் உயிரிழந்துள்ளதால் கொரோனா உயிரிழப்பு 5,397 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 65,560 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 34,99,300 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 25 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 53,499 ஆக உள்ளது. தமிழகத்தில் இன்று 37 மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டவாரியாக இன்று கொரோனா பாதிப்பு :

சென்னை 989

கோவை 289

அரியலூர் 76

கடலூர் 258

தர்மபுரி 21

திண்டுக்கல் 141

ஈரோடு 50

கள்ளக்குறிச்சி 86

செங்கல்பட்டு 453

காஞ்சிபுரம் 244

கன்னியாகுமரி 185

கரூர் 40

கிருஷ்ணகிரி 9

மதுரை 151

நாகை 71

நாமக்கல் 47

நீலகிரி 7

பெரம்பலூர் 31

புதுக்கோட்டை 131

ராமநாதபுரம் 60

ராணிப்பேட்டை 57

சேலம் 173

சிவகங்கை 65

தென்காசி 138

தஞ்சாவூர் 154

தேனி 286

திருப்பத்தூர் 64

திருவள்ளூர் 390

திருவண்ணாமலை 152

திருவாரூர் 27

தூத்துக்குடி 103

திருநெல்வேலி 189

திருப்பூர் 64

திருச்சி 161

வேலூர் 143

விழுப்புரம் 104

விருதுநகர் 219

Categories

Tech |