Categories
தேசிய செய்திகள்

அண்ணன் வாங்கிக்கொடுத்த ஐஸ் கிரீம்….. தங்கைக்கு நேர்ந்த நிலை…. பண தேவைக்காக இப்படியா…?

பணத் தேவைக்காக குடும்பத்தையே விஷம் வைத்துக் கொல்ல முயற்சித்ததில் சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

கேரளா மாநிலத்தில் இருக்கும் காசரக்கோடு மாவட்டத்தை சேர்ந்த ஆன்மேரி என்பவர் அவரது அண்ணனான ஆல்பின் பென்னி வாங்கிக் கொடுத்த ஐஸ்க்ரீமை சாப்பிட்டு உயிரிழந்துள்ளார், அதோடு ஆல்பின் பெண்ணின் தாய் தந்தையும் அதே ஐஸ்கிரீமை சாப்பிட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆன்மேரி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொள்ள தொடங்கினர். அதில் ஆன்மேரி சாப்பிட்ட ஐஸ்கிரீமில் விஷம் கலக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அவரது சகோதரரான ஆல்பின் பென்னியை போலீசார் விசாரிக்கையில் அவர் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் தனக்கு பணம் தேவை இருந்ததால் ஒட்டுமொத்த குடும்பத்தையும் கொலை செய்துவிட்டு வீடு மற்றும் பொருட்களை விற்பதை நோக்கமாக வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து ஆல்பின் பெண்ணின் மீது வழக்குப் பதிந்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |