Categories
உலக செய்திகள்

கொரோனா பாதித்தோரை கண்டறியும் பேருந்து நிழற்கூடம்…தென்கொரியா அறிமுகம்…!!!

தென்கொரியாவில் கொரோனா பாதித்தவர்களை கண்டறிந்து, தடுத்து நிறுத்தும் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட பேருந்து நிழல் கூடத்தை அந்நாட்டு அரசு அறிமுகம் செய்துள்ளது.
தென்கொரியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.  அதன் ஒரு பகுதியாக தலைநகர் சியோலில் இருக்கின்ற  முக்கிய பேருந்து நிலையங்களில் சூரிய வெப்பத்தில் இயங்க கூடிய கண்ணாடிகளால் சூழப்பட்ட பேருந்து நிழல் கூடங்களை அமைத்திருக்கிறது. கொரோனாவால் பாதிப்படைந்தவர்கள் யாராவது அதற்குள் நுழைய முயற்சி செய்தால் அவர்களை ஸ்கேன் செய்து, காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் உள்ளே நுழைவதற்கு அனுமதி மறுத்து விடுகிறது.
கொரோனா மற்றவர்களுக்கு பரவாமல் இருக்கும் வகையில் ,முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக இந்த நிழலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இது பாதிப்படைந்த நபர்களை தடுத்து நிறுத்துவது மட்டுமல்லாமல், பல்வேறு சிறப்பம்சங்களையும் கொண்டிருக்கிறது.  அதன் வெளிப்புறம் வெப்பத்தை கண்டறியும் கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதால் உட்புறம் புறஊதா கதிர்களை செயலிழக்க செய்கிறது.மேலும் குளிர்சாதன வசதி, இலவச வைபை, செல்போன்களை சார்ஜ் செய்து கொள்ளும் வசதி மற்றும் நோய் தீர்க்கும் வகையிலான இசையை கேட்கும் வசதிகளுடன் அது அமைந்திருக்கிறது.
அதிகம் வெப்பம் நிறைந்த சியோல் நகரத்தில், வெளிப்புறம் இருப்பதனை விட வீடு உள்ளிட்ட உட்புறங்களிலேயே கொரோனா வைரஸ் மிக எளிதில் பரவும் ஆபத்து இருக்கின்றது.  அதனால், அதிக வெப்பசூழல் மற்றும் மழைப்பொழிவு ஆகியவற்றில் இருந்து மக்கள் தப்பித்து கொள்ளவும் மற்றும் வைரஸ் தொற்றுகளில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளவும் இதுபோன்ற  சூழலை உருவாக்க நாங்கள் விரும்பினோம் என்று  அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதுபோன்ற அமைப்புகளை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளனர். கொரோனா வைரசின் பாதிப்புகளை எதிர்த்து போராடுவதில் தென்கொரியா மிக அதிக திறனை கொண்டிருக்கிறது. மேலும்  5 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டுள்ளது. தென்கொரியா குறித்து ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தகவலில், தற்போது வரை 15 ஆயிரத்திற்கும் குறைவான பாதிப்புகளையும் மற்றும் 305 பலி எண்ணிக்கையையும் தென்கொரியா கொண்டுள்ளது”  என்று தெரிவித்திருக்கிறது.

Categories

Tech |