வீட்டு வாசலில் சர்வீஸ் செய்யும் புதிய திட்டத்தை டிவிஎஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
எக்ஸ்பெர்ட் ஆன் வீல்ஸ் எனும் திட்டத்தை டிவிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு அவர்களது வாகனங்களை வீட்டுவாசலில் சரிசெய்து வழங்குவதாக முடிவு செய்துள்ளது. இத்திட்டம் நாடு முழுவதும் சுமார் 300 விற்பனை மையங்களில் செயல்படுகிறது. விற்பனையாளர்களை வாடிக்கையாளர்கள் அவர்கள் வசிக்கும் பகுதியில் இருந்து தொடர்புகொண்டு சர்வீஸ் செய்யும் நேரத்தை குறித்துக்கொள்ள முடியும்.
மேலும் இத்திட்டத்தை செயல்படுத்தும் விற்பனையகங்கள் முழுமையாக சனிடைசர் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று டிவிஎஸ் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. மேலும் சர்வீஸ் செய்ய வாடிக்கையாளர்களை சந்திக்க செல்லும் பணியாளர்கள் பாதுகாப்பு உடைகளை அணிந்து செல்லவும் அறிவுறுத்தியுள்ளனர். ஊரடங்கு காலகட்டத்தில் டிவிஎஸ் நிறுவனம் தனது சர்வீஸ் உதவி எண் மற்றும் ரோடு சைடு அசிஸ்டன்டஸ் போன்ற சேவைகளை தொடங்கி அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்கி வருகின்றனர். மேலும் காலாவதியான இலவச சர்வீஸ், வாரண்டி மற்றும் ஏ எம் சி போன்ற சேவைகளின் வேலிடிடி நீட்டிக்கப்பட்டுள்ளது.