காங்கிரஸ் மேலிடத்தின் சமாதான முயற்சியை அடுத்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட் இடையே இன்று முக்கிய சந்திப்பு நடக்க உள்ளது.
அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையே ஏற்பட்ட மோதலால், ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு கவிழும் நிலைக்கு தள்ளப்பட்டது. சச்சின் பைலட் தமது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேருடன் டெல்லி அருகே ஹோட்டலில் முகாமிட்டு தங்கியிருந்தார். ஒரு மாத காலம் நீடித்த பிரச்சனையால் காங்கிரஸ் மேலிடம் சமாதான முயற்சியில் இறங்கியது. இதன் பலனாக ஜெய்ப்பூரில் இன்று நடக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், சச்சின் பைலட் உள்ளிட்ட 19 காங்கிரஸ் எம்.எல்.ஏகளும் கலந்து கொள்ள உள்ளனர்.
அப்போது அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் சந்தித்துப் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நாளை சட்டமன்றம் கூடும் போது நம்பிக்கை வாக்கு கூறுவது அவசியமா என்பது குறித்து, இருவரும் முடிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சச்சின் பைலட் சமாதானமடைந்து கட்சிக்கு திரும்பிவிட்டதாக ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசுக்கு பிரச்சனை ஏற்படாது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.