Categories
பல்சுவை

“ஓப்போ ஸ்மார்ட்போன்” அதிரடி விலை குறைப்பு…. வாங்க நினைத்தவர்கள் வாங்கிக் கொள்ளலாம்….!!

இந்தியாவில் ஓப்போ ஸ்மார்ட்போனின் விலை 3 ஆயிரம் வரை குறைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் ஒப்போ ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்பு இதன் விலை 2000 வரை உயர்த்தப்பட்டது. மொபைல் போன்கள் மீது பிஎஸ்க் இவரி உயர்த்தப்பட்டதால் விலை உயர்த்தப்படுவதாக தெரிவித்திருந்தனர். இருப்பினும் சமீபத்தில் இதன் 8 ஜிபி+ 256 ஜிபி வேரியண்ட் விலை குறைக்கப்பட்டுள்ளது. விலை குறைப்பு என அறிவிக்கப்பட்ட ஒரே மாதத்தில் ஒப்போ ரெனோ 3 புரோ விலை மீண்டும் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

oppo reno 3 pro: ஒப்போ ரெனோ 3 ப்ரோவின் ...

 

8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி விலை 2000 குறைக்கப்பட்டு தற்போது இதன் விலை ரூ.27,990 ஆக உள்ளது. இதேபோன்று 8 ஜிபி+ 256 ஜிபி மெமரி மாடல் ரூ.29,9990 ஆக மாறியுள்ளது. இதன் விலை முன்னதாக 32,990 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. அந்தவகையில் ஓப்போ ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை அதிகபட்சம் 3 ஆயிரம் வரை குறைக்கப்பட்டுள்ளது. ஃப்லிப்கார்டு, அமேசான் போன்ற வலைதளங்களில் குறைக்கப்பட்ட புதிய விலை மாற்றப்பட்டுவிட்டது. இதேபோன்று ஆஃப்லைன் விற்பனை மையங்களிலும் மாற்றப்படும் என தெரிகிறது.

Categories

Tech |