தமிழ், இந்தி படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராய் தற்போது ஹாலிவுட் படங்களில் நடிக்க ஆர்வம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
எந்திரன் படத்தை அடுத்து தற்போது ஐஸ்வர்யா ராய் மணிரத்னம் இயக்கும் புதிய படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வரஉள்ளார். இந்த படத்தை பொன்னியின் செல்வன் நாவலை வைத்து திரைப்படமாக்கும் முயற்சியில் மணிரத்னம் உள்ளார். இப்படத்தில் ஐஸ்வர்யா ராயுடன் இணைந்து கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.
இந்நிலையில் ஐஸ்வர்யா ராயின் கவனம் முழுவதும் ஹாலிவுட்டின் பக்கம் திரும்பியுள்ளது. இது பற்றி தயாரிப்பு நிறுவனம் ஒரு அறிக்கையொன்று வெளியிட்டது. அதில் ஐஸ்வர்யா ராய் ஹாலிவுட்டில் நடிக்கும் படத்தின் முதல்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளனர்.
ஐஸ்வர்யா தன் ஹாலிவுட் பட ஆசைக்காக ஒரு குழுவை அமைத்துள்ளதாகவும் அவர்கள் அங்கு ஐஸ்வர்யா ராயிக்கான வாய்ப்புகளை கவனித்துவருவதாகவும் தெரியவந்துள்ளது. இந்த வகையில் தீபிகா படுகோனே, நிவேதா பெத்துராஜ், பிரியங்கா சோப்ராவுக்கு, பிறகு ஹாலிவுட்டுக்கு செல்லும் நடிகையாக ஐஸ்வர்யாவாக இருப்பார்.