Categories
தேசிய செய்திகள்

24 லட்சத்தை நெருங்கும் கொரோனா தொற்று…!!

இந்தியாவில் புதிய உச்சமாக 24 மணி நேரத்தில் 66,999 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரே நாளில் தொற்று  பாதித்து 942 பேர் உயிரிழந்து விட்டனர். 24 மணி நேரத்தில் புதிதாக 66,999 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23,96000 தாண்டி உள்ளது. கொரோனாவுக்கு  சிகிச்சை பெற்றவர்களில், மேலும் 942 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 47,033 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா  பாதித்தவர்களின் 6. 53000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சையில் குணமடைந்து 16. 96 லட்சம்  பேர் வீடு திரும்பி விட்டனர். மாநிலங்களைப் பொறுத்தவரை பாதிப்பில் மராட்டியம், தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் முதல் நான்கு இடங்களில் உள்ளன. உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 3 வது இடத்திலும், பலி எண்ணிக்கை 4 வது இடத்திலும் உள்ளது.

Categories

Tech |