Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பெங்களூரு கத்திரிக்காய் – உரிய விலையின்றி விவசாயிகள் வேதனை

கொடைக்கானலில் பெங்களூரு கத்திரிக்காய் நல்ல விளைச்சலை கண்டும் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான பெருமாள்மலை, அடுக்கம், வாழைகிரி, ஊத்து , மற்றூர், பண்ணைக்காடு, தாண்டிக்கொடி உள்ளிட்ட பல்வேறு மலைப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் காபி, அவகடோ, மிளகு அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த நிலங்களிலேயே விவசாயிகள் ஊடுபயிராக பெங்களூரு கத்திரிக்காய் விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கொடைக்கானலில் கடந்த பரவலாக தொடர் மழை பெய்ததன் காரணமாக இந்த ஆண்டு ஜவ்சூஸ் காய்களின் விளைச்சல் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக விளைச்சல் இருந்தாலும் போதிய விலை கிடைக்கவில்லை எனவே அரசு நிவாரண நிதி வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |