Categories
கல்வி தேசிய செய்திகள்

பள்ளிகள் திறப்பு? – மத்திய அரசு அதிகார்வப்பூர்வ அறிவிப்பு..!!

இந்தியா முழுவதும் டிசம்பர் மாதம் வரை பள்ளிகள் திறக்கப்படாது என வெளிவந்த தகவல் உண்மையில்லை என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் டிசம்பர் மாதம் வரை பள்ளிகள் திறக்கப்படாது என வெளிவந்த தகவல் உண்மையில்லை என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய அரசாங்கம் அதுபோல எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை என்றும், பள்ளி திறப்பதற்கான தேதியும் இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என்றும் கூறியுள்ளது.

முன்னதாக மனிதவள மேம்பாட்டிற்கான நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கல்வி ரீதியாகவும், தற்போது நிலவ கூடிய சூழல்கள், கல்லூரிகள் திறப்பு தொடர்பான ஆலோசனைகள் நடத்தப்பட்டது..

அப்போது மத்திய மனிதவள மேம்பாட்டு உயர்கல்வித்துறை செயலாளர் அமித் கரே பேசியதாவது, கல்லூரி இறுதியாண்டு தேர்வு திட்டமிட்டபடி இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தி முடிக்கப்படும் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் கொரோனா காரணமாக வகுப்புகள் தொடங்குவது தாமதமாகும் என்றும் அவர் கூறியதாக தகவல் வெளியானது.

மேலும் பள்ளி கல்லூரிகள் வகுப்புகள் அனைத்தும் டிசம்பர் மாதம் வரை செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருப்பதாகவும், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியாகும் என்று அவர் கூறியதாக தகவல் வெளியானது.. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.. இந்தநிலையில் தான் இந்த அறிவிப்பை மத்திய அரசு அதிகார்வ பூர்வமாக அறிவித்துள்ளது.

Categories

Tech |