தென்சென்னை பகுதியில் குடிநீர் முதல் சாக்கடை கழிவுநீர் அப்புறப்படுத்துதல் வரை அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி தருவதாக திமுக வேட்பாளர் கூறியது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
தென்சென்னை மக்களவை தேர்தல் தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் சோழிங்கநல்லூர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார் இதனையடுத்து திமுகவின் வர்த்தக அணியை சேர்ந்த தீனன், ஜே.சி.பி. இயந்திரத்தில் பூக்களை முழுவதுமாக நிரப்பி தமிழச்சி தங்கபாண்டியன் மீது பொழியச்செய்தார் .அதன் பின் பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கி டீ கடையில் மக்களாக டீ குடித்து வாக்கு சேகரித்தார் .
அதன் பின் அப்பகுதி மக்களிடம் பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்தார் நான் போட்டியிட இருக்கும் இந்த தொகுதியானது சென்னை மாநகராட்சியுடன் இணைந்து பிறகும் எந்த ஒரு அடிப்படை வசதிகளுமின்றி திகழ்ந்து வருகிறது குறிப்பாக கூறவேண்டும் என்று சொன்னால் ,
இங்கே குடிநீர் வசதி என்பது இன்னும் ஏற்படுத்தப்படவில்லை மேலும் பாதாள சாக்கடை திட்டம் இன்னும் செயல்படுத்தப்படவில்லை சாக்கடைகள் அனைத்தும் திறந்த வெளியில் ஓடிக்கொண்டிருக்கிறது இதற்கு காரணம் உள்ளாட்சித்துறை செயல்படாமல் இருப்பதே ஆகவே திமுக ஆட்சி அமையும் பட்சத்தில் இந்த அனைத்து பிரச்சினைகளும் முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சரி செய்யப்படும் என்று அவர் தனது பிரச்சார பயணத்தில் கூறினார்