Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி முற்றுகை போராட்டம் ….!!

100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்கிட கோரி தொழிலாளர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே உள்ள முகவநூரில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் முறையாக பணி வழங்கப்படுவதில்லை. இது தொடர்பாக அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் வேலை இன்றி வருமானம் இழந்து தவிக்கும் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் வையம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Categories

Tech |