தனியார் பேருந்து ஓட்டுநர் நடத்துனர்கள்யின் வாழ்வாதாரம் காக்க அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் பொது போக்குவரத்து சேவைகள் நடைபெற்று வந்தன. அவ்வாறு தனியார் பேருந்து சேவையும் சுமார் 10 நாட்கள் மட்டுமே இயக்கப்பட்டு மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சுமார் 5 மாத காலமாக வேலையின்றி தவிக்கும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
ஓட்டுநர் தொழில் மட்டுமே தெரிந்த இவர்களுக்கு தற்போது மாற்று தொழில்களும் முடங்கியுள்ளதால் தங்களது வாழ்க்கையை நடத்த சிரமப்பட்டு வருவதாகவும், தங்களுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களும் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.