கடக ராசி அன்பர்களே….! இன்று நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டிய நாளாக இருக்கும். மனைவியின் கழகத்தால் உறவுகள் குழப்பங்கள் ஏற்படும். அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் பணியிடத்தில் சாதகமான சூழல் உருவாகும். இன்று குடும்பத்தில் நிம்மதி கொஞ்சம் குறையலாம். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் விஷயத்தில் கவனம் செலுத்துவது ரொம்ப நல்லது.
உறவினர்கள் வருகை இருக்கும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடன் பேசும்பொழுது வார்த்தைகளை கோர்த்து பேசுவது முக்கியம். புதிய வேலைக்கான முயற்சிகளில் சாதகமான போக்கு காணப்படும். புதிய வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரக்கூடும். உறவினர் வகையில் உதவிகள் கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் கைத்தொழிலும் உங்களுக்கு நன்மையை இன்று ஏற்படும்.
காதலர்களுக்கும் இன்றைய நாள் மிக சிறப்பான நாளாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.