மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சிறை கைதிகள் 1000 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. நாட்டிலேயே வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கையில் மகாராஷ்டிர மாநிலம் தான் முதலிடத்தில் உள்ளது. இதனிடையில், அந்த மாநிலத்தில் உள்ள சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கும், சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் கொரோனா பரவி வருகிறது. மகாராஷ்டிராவில் உள்ள சிறைச்சாலைகளில் கொரோனா பரவல் பற்றிய தகவல்களை மாநில சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் இருக்கும் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டு வைத்திருந்த கைதிகளில் இதுவரை 1,000 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும். சிறைச்சாலைகளில் பணிபுரியும் அதிகாரிகளில் 292 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் அங்கு கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,292 ஆக இருக்கிறது. இந்த சிறைச்சாலைகளில் வைரஸ் தாக்கப்பட்டு இதுவரை 6 கைதிகள் உயிரிழந்துள்ளனர் என மாநில சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.