Categories
தேசிய செய்திகள்

ரூ2,500…. குறைந்த விலையில் கொரோனா மருந்து…. ஜைடஸ் கெடிலா நிறுவனம் அறிமுகம்….!!

இந்தியாவில் குறைந்த விலையில் உள்ள கொரோனா மருந்தை ஜைடஸ் கெடிலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன்  பாதிப்பை முற்றிலும் தடுக்க தடுப்பூசியை கண்டுபிடிப்பதிலும் உலக நாடுகள் மும்முரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில்,  ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் தடுப்பூசி கண்டுபிடித்து விட்டதாக தெரிவித்தனர். அதற்கான பரிசோதனைகள் நடைபெற்று வரும் சூழ்நிலையில், 

இந்தியாவும் வெளிநாடுகளிலிருந்து தடுப்புசியை  வாங்குவதற்கான ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தற்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிகமாக ஹைடிராக்சி குளோரோயின்  உள்ளிட்ட மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டது.  அந்தவகையில், கொரோனா நோயாளிகளின் உயிர் காக்கும் மருந்தாக உள்ள ரெம்டெசிவிர்  மருந்தை குறைந்த விலையில் ஜைடஸ் கெடிலா  நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த மருந்து இந்தியாவில் ரெசின் டெஸ் என்ற பெயரில் பயன்பாட்டுக்கு வரும். இந்த மருந்தின் விலை ரூபாய் 2,500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனவும்,  இம்மருந்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Categories

Tech |