Categories
தேசிய செய்திகள்

3.50 கோடி சுரண்டல்… முதல் இந்து தலைமை நீதிபதி மீது வழக்கு பதிவு…!!

3 1/2 கோடி சுரண்டல் வழக்கு குறித்து வங்காளதேசத்தின் இந்து முதல் நீதிபதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வங்காளதேசத்தில் இந்து மதத்தில் இருந்து முதலாவது தலைமை நீதிபதியாக சென்ற 2015-ம் ஆண்டு பொறுப்பேற்றவர், சுரேந்திர குமார் சின்கா. இவருக்கும் அரசுக்கும் ஏற்பட்ட மோதலால், 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் பதவி விலகி விட்டார். பிறகு அரசியலில் சேர அமெரிக்காவில் சென்று குடியேறினார். இதனிடையே, 2016-ம் ஆண்டு, விவசாயிகள் வங்கியில் 2 தொழிலதிபர்கள் போலி ஆவணங்களுடன் பெற்ற ரூ.3½ கோடி கடன், தலைமை நீதிபதி சுரேந்திர குமார் சின்காவின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது பற்றி, சின்கா, அவருக்கு நெருக்கமான 4 பேர், வங்கி அதிகாரிகள் 6 பேர் உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் ஒழிப்பு ஆணையம் வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில், நீதிபதி சின்கா மற்றும 11 பேர் மீது நேற்று டாக்கா கோர்ட்டில் நீதிபதி ஷேக் நஜ்முல் ஆலம் முன்னிலையில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கிற்கான சாட்சிகள் விசாரணை, 18-ந் தேதி தொடங்க இருக்கிறது.

Categories

Tech |