Categories
தேசிய செய்திகள்

5 மாதங்களுக்குப் பிறகு… மீண்டும் தொடங்கும்… வைஷ்ணவி தேவி ஆலயம்…!!

ஐந்து மாத காலங்களுக்கு பிறகு வைஷ்ணவி தேவி ஆலயம் மீண்டும் திறக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஜம்மு மாவட்டத்தின் கத்ராவிற்கு அருகில் அமைந்துள்ள வைஷ்ணவ தேவி குகைக்கோவில் மிகவும் புனிதமான இந்து சமயக்கோவில்களில் ஒன்றாக உள்ளது. இந்த கோவில் சக்தி வழிபாட்டிற்கு மிகவும் பெயர் பெற்ற புனிதத்தலமாகவும், வட இந்தியாவில் மிகவும் போற்றப்படும் வழிபாட்டுத்தலங்களில் ஒன்றாகவும் உள்ளது. கடல்மட்டத்தில் இருந்து சுமார் 5200 அடிகள் உயரத்தில் இக்கோவில் அமைந்திருக்கிறது. வருடம் தோறும் சுமார் 8 லட்சம் பக்தர்கள் வைஷ்ணவ தேவி கோவிலுக்கு அன்னையின் அருள் பெறுவதற்காக வருகின்றனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குளிர்கால தலைநகரான ஜம்முவில் இருந்து சுமார் 42 கிலோமீட்டர் தூரத்தில், ரேசாய் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ஆலயத்துக்கு கத்ரா மலையடிவார முகாமில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தூரம் வரை செங்குத்தான மலையின் வழியாக ஏறிச்செல்ல வேண்டும். ஒன்பதுநாள் திருவிழாவாக கொண்டாடப்படும் நவராத்திரி திருநாளையொட்டி இந்த ஆலயத்துக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.

ஆனால் தற்பொழுது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சென்ற ஐந்து மாதங்களுக்கு முன்னரே வைஷ்ணவ தேவி கோவில் யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் நாளை மறுநாள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த யாத்திரை மீண்டும் தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு நாளைக்கு 500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்ற சான்றிதழ்கள் கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் அரசு மேலும் அதிகமான பக்தர்களை அனுமதிக்க வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |