உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே ஒரு வெளிநாட்டு விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் முக கவசம் ஏதும் அணியாமல் சென்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது. அந்த புகைப்படம் தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முகமூடி அணியாமல் இருப்பது தொடர்பாக அவரின் பதிவு குறித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தற்போது அறிவித்திருக்கிறது. நீதிபதிகளின் செயல்பாட்டை சமூகவலைதளத்தில் விமர்சித்தது தொடர்பாக அவமதிப்பு வழக்கின் கீழ் ஆகஸ்ட் 20-ஆம் தேதி அவருக்கு என்ன மாதிரி தண்டனை என்பது சம்பந்தமான முக்கிய தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.