Categories
மாநில செய்திகள்

கடைசி செமஸ்டர் தேர்வுகள் ரத்து..? – ஸ்டாலின் வலியுறுத்தல்

கலை அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான இறுதியாண்டு கடைசி செமஸ்டர் தேர்வுகளை இரத்து செய்துவிட்டு மாணவர்கள் வாங்கியுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் அனைவருக்கும் பட்டங்களை வழங்குமாறு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார்.

மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாநிலங்களில் உள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்ப அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ள மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இறுதியாண்டில் நேர்முகத் தேர்வில் தேர்வு பெற்ற மாணவர்கள் தங்களுக்கு கிடைத்த வேலைகளில் சேர முடியாத சூழல் உருவாகியுள்ளதாகவும், உயர்கல்வி வெளிநாட்டுக் கல்வி உள்ளிட்ட வாய்ப்புகள் தடைபட்டு உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே கனவுகளுடன் காத்திருக்கும் மாணவர்களின் எதிர்காலத்திற்கு காலதாமதமின்றி வழிகாட்டிட முன்வருமாறு மத்திய மாநில அரசுகளை மு.க ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

Categories

Tech |