வங்கதேசத்தின் புதிய தூதராக கடந்த வியாழக்கிழமை அன்று விக்ரம் குமார் துரைசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய வெளியுறவு துறை சேவை அலுவலகத்தில் 1992ஆம் வருடம் பணியில் சேர்ந்தவர் விக்ரம் குமார் துரைசாமி. இவர் வங்கதேசத்தின் புதிய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது, விக்ரம் குமார் துரைசாமி இந்திய வெளியுறவு துறையில் கூடுதல் செயலாளராக பணியாற்றி வருகிறார். இவர் ஏற்கனவே கொரியா, உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகளில் தூதராக பணியாற்றிய அனுபவமுடையவர்.
டாக்காவின் தூதராக இருக்கும் ரிவா கங்குலி தாஸிற்கு பின் இந்தப் பதவியை விக்ரம் குமார் துரைசாமி பெற இருக்கிறார். மேலும், இவர் இந்திய வெளியுறவு துறையில் பணிபுரிவதற்கு முன் செய்தியாளராகவும் பணியாற்றி இருக்கிறார். வங்கதேசத்தின் புதிய தூதராக விக்ரம் குமார் துரைசாமி விரைவில் பொறுப்பேற்பார் எனவும் தகவல்கள் வெளியாகிி இருக்கின்றன.