Categories
தேசிய செய்திகள்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு… “குற்றவாளி பூஷண்”… உச்சநீதிமன்றம் தீர்ப்பு …!!

நீதிபதிகள் செயல்பாட்டை சமூக வலைதளத்தில் பரப்பி விமர்சித்த  வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் சென்ற ஜூன் மாதம் 27-ந்தேதி உச்சநீதிமன்றத்தை மதிக்காத  வகையில் ட்விட்டரில் செய்தி ஒன்று பதிவிட்டிருந்தார். அதன்பிறகு தமைமை நீதிபதி எஸ்.எ. பாப்தே பா.ஜனதா தலைவருடன் சேர்ந்து 50 லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தது குறித்து ஜூலை 22-ஆம் தேதி டுவீட் ஒன்று பதிவு செய்திருந்தார்.

இதனால் உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து பூஷண் மீது நீதிமன்ற அவதிப்பு வழக்கு தொடர்ந்தது. இன்று அந்த வழக்கு மீதான தீர்ப்பை அருண் மிஷ்ரா தலைமையிலான பி.ஆர். கவாய், கிருண்ஷ முரளி கொண்ட அமர்வு வழங்கியுள்ளது. தீர்ப்பில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என்று அறிவித்தது. மேலும், ஆகஸ்ட் 20-ஆம் தேதி குற்றவாளி என்ற தீர்ப்புக்கு எதிராக பிரசந்த பூஷண் தனது கருத்தை பதிவு செய்யலாம் எனத் தெரிவித்திருக்கிறது.

Categories

Tech |