Categories
தேசிய செய்திகள்

பூடானில் கொரோனாபாதிப்பு …முதன்முறையாக ஊரடங்கு அறிவிப்பு…!!!

பூடானில் முதல்முறையாக கொரோனா பாதிப்பால் முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் அண்டைநாடான பூடானில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நாட்டின் அனைத்து எல்லை பகுதிகளும் அடைக்கப்பட்டன. ஆனால் அங்கு கொரோனா பரவல் குறைவாக இருந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் எத்தகைய பாதிப்பும் ஏற்படவில்லை. இந்நிலையில் குவைத்தில் இருந்து  பூடான் திரும்பிய 27 வயது பெண் ஒருவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், அவருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அதன் பின்னர் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் கொரோனா பரவலை தாக்கும் வகையில்,பூடானில் நாடு முழுவதும் முதல்முறையாக முழுஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 21 நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கில், அனைத்து பள்ளிகள், அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகங்கள் திறக்க அனுமதியில்லை. தொற்று உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது. அந்நாடு  7½ லட்சம் மக்கள் தொகையை கொண்டிருப்பதால்  மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அரசு வலியுறுத்தியுள்ளது.

Categories

Tech |