ஆழியார் அணை நீர்மட்டம் 8 மாதங்களுக்கு பிறகு 100 அடியை கடந்துள்ளது.
பொள்ளாச்சி அடுத்து உள்ள ஆழியார் அணை 120 அடி உயரம் கொண்டது. 3.25 TMC கொள்ளளவு கொண்ட ஆழியாறு அணை மூலம் ஆழியார் பழைய ஆயக்கட்டு, புதிய ஆயக்கட்டு மற்றும் வேட்டைக்காரன்புதூர் கால்வாய்கள் வழியாக சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. மேலும் குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் இறுதியில் ஆழியார் அணையில் 100 அடிக்கும் கீழ் நீர்மட்டம் குறைந்தது.
இந்நிலையில் இந்த ஆண்டு நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் 60 அடிக்கும் கீழ் இருந்த ஆழியார் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 100 அடியை நேற்று நடந்தது. கடந்த 8 மாதங்களுக்கு பிறகு ஆழியார் அணை 100 அடியை கடந்துள்ளது. விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.