Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி: 9 வயது சிறுமிக்கு…. “பாலியல் வன்கொடுமை” நேரில் பார்த்த பாட்டி உயிரிழப்பு…!!

ஈரோடு அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தமிழகத்தில் நாளுக்கு நாள் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து கொண்டேதான் வருகிறது. எந்த தைரியத்தில் இதுபோன்ற குற்றங்கள் நடக்கிறது என்பது தெரியவில்லை. தற்போது ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே 9 வயது சிறுமியை ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

9 வயது சிறுமியை கொடூரன்  பாலியல் வன்கொடுமை செய்வதை நேரில் பார்த்த சிறுமியின் பாட்டி அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து தப்பிச்சென்ற ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் மிகுந்த செல்வாக்கு உள்ளவர் என்பதால், அவரை தப்பிக்கவிடாமல் உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் தாமதம் செய்யக்கூடாது எனவும் சிறுமியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

Categories

Tech |