Categories
உலக செய்திகள்

பள்ளிகளை திறக்க ஆர்வம் காட்டிய  டிரம்ப்…12½ கோடி முக கவசங்கள்…அதிபர் முடிவு…!!!

அமெரிக்காவில் பள்ளிகளை திறக்க ஆர்வம் காட்டியுள்ள  டிரம்ப், அதற்காக 12½ கோடி முக கவசங்கள் அனுப்ப முடிவு செய்துள்ளார்.

அமெரிக்க நாட்டில் கொரோனா பரவலுக்கு மத்தியில் பள்ளிக்கூடங்களை திறப்பதற்கு  ஜனாதிபதி டிரம்ப் ஆர்வம் காட்டியுள்ளார். அதனால் மாணவ, மாணவிகள் அணிந்து கொள்வதற்காக நாடு முழுவதும் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு 12½ கோடி முக கவசங்களை அனுப்பி வைப்பதாக கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி பள்ளிக்கூடங்களுக்கு, நோய் கட்டுப்பாடு மற்றம் தடுப்பு மையங்களில் இருந்து  நிபுணர் குழுக்களை அனுப்பி வைக்க தயாராக இருப்பதாக எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் பள்ளிக்கூடங்களை பாதுகாப்பாக திறப்பதற்காகவே இந்த நடவடிக்கையை தான் மேற்கொள்ளவதாக டிரம்ப் கூறியிருக்கிறார்.


Categories

Tech |