Categories
தேசிய செய்திகள்

சுஷாந்த் சிங் மரணம்- அரசியல் நிர்பந்தத்துக்கு பணிந்தது மும்பை போலீஸ்…!!

பிரபல ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணம் தொடர்பாக அரசியல் நிர்பந்தத்திற்கு பணிந்து மும்பை போலீசார் முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யவில்லை என்றும் பாட்னா காவல்துறையின் புலன் விசாரணைக்கு ஒத்துழைப்பு தர மறுத்து விட்டதாகவும் உச்சநீதிமன்றத்தில் பிகார் அரசு பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது.

ஹிந்தி திரைப்பட உலகின் இளம் நடிகர்கள் சுஷாந்த் சிங் ராஜ்புட், கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அன்று  தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் சுஷாந்த் சிங்கின்  நெருங்கிய தோழியான நடிகை ரியா சக்கரவர்த்தி, அவரை தற்கொலைக்கு தூண்டியதாகவும், சுஷாந்த் சிங் வங்கி கணக்கில் இருந்து 15 கோடி ரூபாயை எடுத்துக்கொண்டு ஏமாற்று, மோசடி, நம்பிக்கை துரோகம், திருட்டு, கிரிமினல், சதி உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதாகவும் சுஷாந்த் சிங்கின் தந்தை திரு. கிருஷ்ண கிஷோர் பாட்னா போலீசாரிடம் புகார் தெரிவித்தார். பீகார் முதலமைச்சர் திரு. நிதீஷ்குமார் பரிந்துரையின் பேரில், மத்திய அரசின் உத்தரவுப்படி இது குறித்து சிபிஐ புலன் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் பாட்னாவில்  தன் மீது பதிவு செய்யப்பட்ட புகாரை மும்பைக்கு மாற்றக்கோரி நடிகர் ரியா சக்ரவர்த்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக நீதிமன்ற உத்தரவின் பேரில் பீகார்  அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் திரு.கேசவ மோகன் நேற்று பதில் மனு தாக்கல் செய்தார்.

சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக அரசியல் நிர்பந்தத்தின் பேரில் மும்பை போலீசார் முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யவில்லை என்றும் பாட்னா காவல்துறையினர் புலன் விசாரணைக்காக மும்பை சென்றபோது, அங்குள்ள போலிசார் எவ்வித ஒத்துழைப்பும் தரவில்லை என்றும். பீகார் அரசின் பதில் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பன்முக திறன் கொண்ட இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்  மரணத்தின் பின்னணி உண்மைகளை வெளிக்கொணர, சிபிஐ மேற்கொண்டுள்ள புலன் விசாரணைக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்த கூடாது என்று. இதனை கருத்தில் கொண்டு நடிகை ரியா சக்ரவர்த்தியின் மனுவை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் பீகார் அரசின் பதில் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வழக்கில் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தங்களையும் மத்திய அமலாக்கப்பிரிவையும் தொடர்ந்து புலன் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Categories

Tech |