Categories
உலக செய்திகள்

கடற்கொள்ளையர்களுக்கு அபராதம் விதித்த நைஜீரியா அரசு…மக்களிடையே பெரும் வரவேற்பு…!!!

கப்பலை கடத்தி பிணைய தொகை பெற்ற சம்பவத்தில், முதல்முறையாக கடற்கொள்ளையர்களுக்கு அபராதம் விதித்து நைஜீரியா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நைஜீரியா நாட்டில் கினியா வளைகுடா பகுதிக்கு செல்லும் கப்பல்களை வழிமறித்து கடத்தி சென்று பின்னர் விடுவிப்பதற்காக பெருமளவில் பிணைய தொகை கறப்பதை கடற்கொள்ளையர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். அதனை கட்டுப்படுத்த வேண்டும் என நைஜீரிய அரசுக்கு அழுத்தங்கள் வந்தன. அதனால் கடந்த ஆண்டு கடற்கொள்ளையர்களுக்கு எதிரான சட்டம் ஒன்றை அந்த நாட்டு அரசு கொண்டுவந்தது. இந்நிலையில், அங்கு கடந்த மார்ச் மாதம் கடற்கொள்ளையர்கள் கப்பல் ஒன்றை கடத்தி 2 லட்சம் டாலர் பிணைய தொகை பெற்றது தொடர்பாக 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

 

அந்த வழக்கை போர்ட் ஹர்கோர்ட் உயர்நீதிமன்றம் விசாரணை செய்த போது கடற்கொள்ளையர்கள் 3 பேரும் தங்கள் மீதான குற்றங்களை  ஒப்புக்கொண்டனர். அதன் பின்னர் அவர்களுக்கு 2 ஆயிரம் டாலர் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இப்படி கடற்கொள்ளையர்களுக்கு எதிராக நைஜீரியா கோர்ட்டில் அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறைஆகும் . தண்டிக்கப்பட்ட கடற்கொள்ளையர்களில் 2 பேர் நைஜீரியா நாட்டினர் என்றும் ஒருவர் வெளிநாட்டினர் என்றும் தகவல்கள்வெளியாகியுள்ளன. அந்த தீர்ப்பிற்கு  நைஜீரிய கடல் நிர்வாக மற்றும் பாதுகாப்பு அமைப்பின் தலைமை இயக்குனர் பஷீர் ஜாமோ வரவேற்பு அளித்துள்ளனர்.

 

 

குறித்து  அவர் கூறுகையில், “இது எங்கள் கடல்வழிகளில் மோசமான நடவடிக்கைகளில் ஈடுபடுகிற பிற குற்றவியல் சக்திகளுக்கு ஒரு தடையாக அமையும்” என கூறியுள்ளார். அபராதம் மட்டுமே குற்றங்களை தடுக்க போதுமானதாக அமையுமா என அவரிடம் கேள்வி கேட்ட போது, அவர் “நிச்சயமாக. இப்போது திறம்பட வழக்கு தொடரவும், கடற்கொள்ளையர்களை தண்டிக்கவும் சட்டம் வந்திருப்பதே முக்கியம்” என பதில் அளித்துள்ளார். சர்வதேச கடல்சார் பணியகமும் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளது.

Categories

Tech |