அமெரிக்காவின் துணை அதிபராக போட்டியிட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்வாகியுள்ள நிலையில் அவரது பூர்வீகமான திருவாரூர் மாவட்டம் துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஜனநாயக கட்சியின் சார்பில் அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக போட்டியிட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கமலா ஹாரிஸ் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ளதுளசேந்திரபுரத்தை பூர்வீகமாகக் கொண்டவர். கமலா ஹாரிஸ் குலதெய்வ கோவில் இக்கிராமத்தில் அமைந்துள்ளது.
அவரது குடும்பத்தினரின் இங்குள்ள தர்மசாஸ்தா சேவக பெருமாள் ஆலயத்திற்கு நன்கொடைகள் வழங்கியுள்ளனர். அதற்காக கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் கமலா ஹாரிஸ் பெயரும் இடம்பெற்றுள்ளது. தற்போது அவர் அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடுவது மகிழ்ச்சி அளிப்பதாக துளசேந்திரபுரம் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.