பிஎஸ்என்எல் நிறுவனம் சென்னை மற்றும் தமிழ்நாடு வட்டாரங்களுக்கு புதிய சலுகை அறிவித்துள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனம் சென்னை மற்றும் தமிழ்நாடு வாடிக்கையாளர்களுக்கு ரூ.399 விலையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது. இந்த 80 நாட்கள் கொண்ட வேலிடிடி பார்க்கிங் வாய்ஸ் கால் மற்றும் டேட்டா பலன்கள் வழங்கப்படுகிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால் தினமும் 250 நிமிடங்களுக்கு குறைக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை முதற்கட்டமாக சென்னை மற்றும் தமிழ்நாடு வட்டாரங்களில் வழங்கப்படுகிறது. மற்ற வட்டாரங்களுக்கு வழங்குவது பற்றி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. ரூ.399 மற்றும் ரூ.1699 சலுகைகள் இந்த இரு வட்டாரங்களிலும் நீக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் ரூ.399க்கான புதிய ப்ரீபெய்டு சலுகை கிடைக்கும் எனஅறிவித்துள்ளது.
சென்னையில் ரூ 399 மற்றும் 1699 சலுகை நீக்கப்படுவது குறித்த அறிவிப்பை தனது வலைத்தளத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இதனுடன் புதிய சலுகை ரூ 399 பற்றிய தகவலும் இடம்பெற்றுள்ளது. இந்த சலுகையில் தினமும் ஒரு ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. மேலும் இந்த சலுகையில் தினசரி பேட்டா முடிந்ததும் டேட்டா வேகம் நொடிக்கு 80 கேபி ஆக குறைக்கப்படும் அதுமட்டுமல்லாமல் அன்லிமிடெட் வாய்ஸ் கால் உள்ளூர் மற்றும் வெளியூர் நேரம் தினமும் 250 நிமிடங்கள் வரை மட்டுமே பயன்படுத்த முடியும் அதன்பின் மேற்கொள்ளும் அழைப்புகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது.