Categories
இந்திய சினிமா சினிமா

சவாலை ஏற்ற ஸ்ருதிஹாசன்… மேலும் மூன்று பிரபலங்களுக்கு சவால்…!


பசுமை இந்தியா சவாலை ஏற்று சுருதிகாசன் மரக்கன்றுகளை நட்டு, மேலும் 3 திரையுலக பிரபலங்களுக்கு சவால் விடுத்துள்ளார்.

 

பசுமை இந்தியா திட்டத்தின் கீழ் மரக்கன்றுகளை நடும் செயல் தெலுங்கு திரையுலகினர்களிடம் பரவி வருகிறது. சமீபத்தில் தனது பிறந்த நாளையொட்டி நடிகர் மகேஷ்பாபு ஐதராபாத்தில் உள்ள தனது தோட்டத்தில் மரக்கன்று நட்டு நடிகர் விஜய், ஜூனியர் என்.டி. ஆர் மற்றும் நடிகை ஸ்ருதிஹாசன் ஆகியோருக்கு சவால் விடுத்திருந்தார். நடிகர் விஜய் இந்த சவாலை ஏற்று சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் மரக்கன்று நட்டு அந்த புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் மரக்கன்றுகளை நட்டு புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் மகேஷ்பாபுவின் பசுமை இந்தியா சவாலை சுதிகாசன் ஏற்று தனது வீட்டு தோட்டத்தில் மரக்கன்றுகளை நட்டு புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்தி நடிகர் ரித்திக் ரோஷன், தெலுங்கு நடிகர் ராணா மற்றும் நடிகை தமன்னா ஆகியோருக்கு பசுமை இந்தியா சவாலை விடுத்துள்ளார் ஸ்ருதிஹாசன். நடிகர் மகேஷ்பாபு விஜய்க்கும், ஸ்ருதிஹாசனுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |