Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி : சுதந்திர தினத்தன்று நடைபெறவிருந்த கிராமசபைக் கூட்டங்கள் ரத்து |

கொரோனா அச்சம் காரணமாக இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராமசபை கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும் சுதந்திர தினம், குடியரசு தினம், உழைப்பாளர் தினம், காந்தி ஜெயந்தி ஆகிய தினங்களில் கிராமசபை கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று நடைபெறவிருந்த கிராமசபை கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு தமிழக ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் திரு. பழனிச்சாமி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். கிராமசபை கூட்டங்களுக்கான  தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |