Categories
உலக செய்திகள்

கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் கொரோனா…சீனா மக்கள் அச்சம்…!!!

சீனாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்த சிலருக்கு மீண்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் கொரோனா பாதித்து பின்னர் குணமடைந்த இரண்டு பேருக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. உலகில் முதன் முதலில் கொரோனா தொற்று தோன்றிய  மாகாணமான  ஹூபெயில், 68-வயதான பெண் ஒருவருக்கு மீண்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து குணம் அடைந்துள்ளார். அதே போன்று   கடந்த ஏப்ரல் மாதம் ஷாங்காய் மாகாணத்தை சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் அதில் இருந்து குணம் அடைந்துள்ளார். அவருக்கு மீண்டும் அறிகுறிகள் எதுவும் இன்றி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தொற்றில் இருந்து குணம் அடைந்த ஒருவருக்கு மீண்டும் அந்நோய்த்தொற்று ஏற்படுவது மிகவும் அரிது  என்று சுகாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இருந்தாலும் சில நோயாளிகளுக்கு மீண்டும் ஏன்  நீண்ட காலத்திற்கு பின்னர் அறிகுறிகள் தோன்றுகிறது என்பது முக்கிய கேள்வியாக உள்ளது.  கொரோனாவிற்கு எதிரான எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்த காலமே உடலில் நீடிக்கிறதா? என்ற சந்தேகமும் சுகாதார வல்லுநர்களின் மனதில் எழுந்துள்ளன. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு உருவாகும் ஆண்டிபாடிகள், சீக்கிரமாகவே அவர்களது உடலில் இருந்து மாயமாகிவிடுகிறது. அதன் காரணமாகவே, கொரோனா தொற்றுக்கு மீண்டும் சிலர் ஆளாகிறார்கள்.  ஆண்டிபாடிகள் உடலில் இருந்து மறைந்து போனாலும், சில செல்கள் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி கொரோனா தொற்று வராமல் தடுப்பதாகவும்  நிபுணர்கள் சிலர் கூறியுள்ளனர்.

Categories

Tech |