கர்நாடகாவில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு உயர்ந்துள்ளதால், மேட்டூர் அணையின் நீர்வரத்து 25,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலம் குடகு, சாம்ராஜ்நகர், மாண்டியா உள்ளிட்ட பகுதிகளிலும், கேரளா வயநாடு உள்ளிட்ட காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வந்ததால், கர்நாடக அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் சுமார் நொடிக்கு 1.50 லட்சம் கன அடி வரையில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பின்னர் இரு மாநிலங்களிலும் பெய்து வரும் மழை அளவு குறைந்துள்ளதால் காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் அளவுகளும் குறைக்கப்பட்டன.
இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்தது. தற்போது கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் தற்போது வினாடிக்கு 25,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. நீர்வரத்து அதிகரிப்பால் அணையின் நீர்மட்டம் 98.56 அடியாக உயர்ந்துள்ளது. மேலும் காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட்டப்படுகிறது. இதன் காரணமாக விவசாயிகள் சாகுபடி பணிகளில் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.