ராஜஸ்தான் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தில் அசோக் கெலாட் அரசு வெற்றி பெற்றுள்ளது.
சென்ற ஒரு மாத காலமாக ராஜஸ்தான் அரசியலில் வீசி வந்த புயல் திங்கட்கிழமை அன்று சச்சின் பைலட் மீண்டும் காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டதற்கு பிறகு ஒரு நிலைக்கு வந்தது. இருந்தாலும் பேரவையில் தங்கள் பெரும்பான்மையை நிரூபித்து காட்டுவதில் முதலமைச்சர் அசோக் உறுதியாக இருக்கிறார்.
இந்தச் சூழலில் பேரவை இன்று கூடியபோது மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்து 1 மணி வரை பேரவை ஒத்திவைக்கப்பட்டது. ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் கூடிய பேரவையில் அமைச்சர் சாந்தகுமார் தாரிவால் அரசின் மீது நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்தை முன்வைத்து பேசினார். தொடர்ந்து இதன் இதுகுறித்து விவாதம் நடத்தப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது இதில் அசோக் கெலாட் அரசு பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி கண்டது.