ராஜஸ்தான் நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் அரசு வெற்றி பெற்றது
முதல்வர் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையே ஏற்பட்ட மோதல் போக்கு காரணமாக அதிருப்தி நிலவியது. பிரியங்கா காந்தி பேச்சு வார்த்தை நடத்திய போதிலும் சச்சின் சமாதானம் அடையவில்லை.. இதையடுத்து சச்சின் பைலட் துணை முதல்வர் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார்.. அதனைத்தொடர்ந்து அசோக் கெலாட் சட்டசபையை கூட்டுவதற்கு பலமுறை கோரிக்கை விடுத்திருந்தார்..
இறுதியாக 14ஆம் தேதி (இன்று) சட்டசபை கூட்டுவதற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கினார்.. இந்த சூழலில் ராகுல் காந்தியை சச்சின் பைலட் சந்தித்ததை அடுத்து சமரசம் செய்யப்பட்டது.. இருப்பினும் பேரவையில் தங்கள் பெரும்பான்மையை நிரூபித்து காட்டுவதில் முதல்வர் அசோக் உறுதியாக இருந்தார்.
இந்த நிலையில் இன்று ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான அரசு வெற்றி பெற்றது.. ராஜஸ்தான் பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்..
துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் மற்றும் 18 எம்எல்ஏக்கள் பிரிந்து சென்று மீண்டும் சேர்ந்த நிலையில் அரசு வெற்றி பெற்றுள்ளது. 200 உறுப்பினர்களைக் கொண்ட ராஜஸ்தான் பேரவையில் 125 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக காங்கிரஸ் கூறியிருந்தது.